sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 43வது பட்டமளிப்பு விழா: கோலாகலமாக நடந்தது

/

ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 43வது பட்டமளிப்பு விழா: கோலாகலமாக நடந்தது

ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 43வது பட்டமளிப்பு விழா: கோலாகலமாக நடந்தது

ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 43வது பட்டமளிப்பு விழா: கோலாகலமாக நடந்தது


UPDATED : நவ 23, 2024 09:56 AM

ADDED : நவ 22, 2024 05:01 PM

Google News

UPDATED : நவ 23, 2024 09:56 AM ADDED : நவ 22, 2024 05:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''பண்பு, தனி மனிதர்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய கருவியாக பங்காற்றுகிறது,'' என வி.ஐ.டி., பல்கலைக்கழக துணை வேந்தரான பேராசிரியர் டாக்டர் பஞ்சநாத சேதுராமன் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், இன்று எஸ்.எஸ்.எஸ்.ஐ.எச்.எல்., எனும் ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின், 43வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், கல்வியாளரும், வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பேராசிரியர் டாக்டர் பஞ்சநாத சேதுராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

உயர்கல்வியில் முன்மாதிரியான தலைமைத்துவத்துக்கும், புதுமையாக கற்பித்தலுக்கும், அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்ற சேதுராமன், என்.சி.பி., எனும் தேசிய கல்வி கொள்கை - 2020ஐ, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆசியுடன், பட்டமளிப்பு விழா ஊர்வலத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் சாதனைகள், கல்வி, ஆராய்ச்சி, சேவைகள் ஆகியவை அடங்கிய ஆண்டறிக்கையை துணைவேந்தர் வாசித்தார்.

Image 1347729

பேராசிரியர் பஞ்சநாத சேதுராமன் பேசியதாவது: பண்புகளை உருவாக்குவதிலும், சேவையின் கருவியாக தனி மனிதர்களை உருவாக்குவதிலும் கல்வி முக்கியமாக பங்காற்றுகிறது. எஸ்.எஸ்.எஸ்.ஐ.எச்.எல்., என்பது 'சுவாமிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், மனித நேயத்துடன் அன்புடன் சேவையாக செய்வதாகும்.

இந்த பல்கலைக்கழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தேசிய கல்வி கொள்கையில், ஐந்து புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம், கல்வியின் முக்கியத்துவத்தை இம்மையம் எடுத்து காட்டுகிறது. கல்வியின் உண்மையான நோக்கமான, 'கல்வியின் முடிவே குணாம்சம்' என்று பகவான் விளக்கி உள்ளார்.

Image 1347730

கல்விக்கு முக்கியமான பத்து 'சி'க்கள் தேவை


* ஆர்வம் (கியூரியாசிட்டி) - தொடர்ச்சியான கற்றல், ஆய்வுக்கான ஒரு தீப்பொறி.

* நம்பிக்கை (கான்பிடன்ஸ்) - தன்னை நம்புதல், சுவாமியின் போதனைகளில் வேரூன்றியது.

* ஒருங்கிணைப்பு (கன்வெர்ஜென்ஸ்) - அறிவு, மதிப்புகளை சரியான இணக்கத்துடன் ஒன்றிணைத்தல்

* ஒத்துழைப்பு (கொலாபிரேஷன்) - சுவாமியை வழிகாட்டியாக கொண்டு, தங்கள் பயணத்தை தொடருவோருக்கு நன்றி செலுத்துவது,

* மாற்றம் (சேஞ்ச்) - மாற்றத்தை ஒன்றே மாறாதது

* அர்ப்பணிப்பு (கமிட்மென்ட்) - நேர்மை, அர்ப்பணிப்புடன் சிறந்து விளங்குதல்

* தொடர்பு (கம்யூனிகேஷன்) - அறிவையும், மதிப்பையும் திறம்பட பகிர்தல்

* வழிப்பாதை ( கன்டியூட்) - சுவாமிகளின் அறிவுரையை பின் பற்றுதல்

* பாத்திரம் (கேரக்டர்) - வாழ்க்கையின் நோக்கமே அடித்தளம்

Image 1347731

இவ்வாறு பத்து 'சி'க்களை எப்போதும், நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவில் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவில், 'தொடக்கம்' என்ற சொல், 'கற்றல், சேவையின் வாழ்நாள் பயணத்தின் துவக்கம்' என்பதை எடுத்து காட்டுகிறது. இங்கு படித்து பட்டம் பெறும் மாணவர்களாகிய நீங்கள், கற்றுக்கொண்ட விஷயங்களை நிலைநிறுத்தி, சுவாமியின் தன்னலமற்ற சேவையை, அன்பின் தீபமாக ஏற்றி வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உறுதிமொழி ஏற்ற மாணவர்களுக்கு, பட்டம் வழங்கப்பட்டது. பின், பகவானுக்கு மங்களாரத்தி காண்பிக்கப்பட்டது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us