sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி: பிரதமர் மோடி

/

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி: பிரதமர் மோடி

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி: பிரதமர் மோடி

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி: பிரதமர் மோடி


ADDED : நவ 24, 2024 11:42 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியில் சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளையின் பங்கு அளப்பரியது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கடந்த 2014ல், பிரதமராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, 'மன் கி பாத்' எனப்படும், 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி வாயிலாக, நாட்டு மக்களிடையே மோடி உரையாற்றி வருகிறார்.

வித்தியாசமான முயற்சி


நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, பிரதமர் மோடி ஆற்றிய உரை:

சிறு வயதில் சிட்டுக் குருவியை வீட்டுக் கூரைகளிலோ, மரங்களிலோ கண்டிப்பாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் கீச்சொலியைக் கேட்டிருப்பீர்கள்.

நம் அருகில் உயிரி பன்முகத்தன்மையைப் பராமரிப்பதில் சிட்டுக்குருவிக்கு மகத்தான பங்களிப்பு உண்டு. ஆனால் இன்று, நகர்ப்புறங்களில் மிக அரிதாகவே சிட்டுக்குருவி காணப்படுகிறது. பெருகி வரும் நகர்ப்புறங்கள் காரணமாக சிட்டுக்குருவி நம்மை விட்டுத் தொலைவாக சென்று விட்டது.

இன்றைய தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகள், சிட்டுக்குருவியை படங்களிலோ, காணொளிகளிலோ மட்டுமே பார்த்திருக்கின்றனர். அவர்களின் வாழ்வில், இந்த இனிமையான பறவையை மீண்டும் மீட்டெடுக்க, சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை, சிட்டுக்குருவியின் எண்ணிக்கையைப் பெருக்க, பள்ளிக் குழந்தைகளை தங்கள் இயக்கத்தில் சேர்த்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தோர், சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தை பற்றி பள்ளிகளுக்கு சென்று எடுத்துரைக்கின்றனர்.

மேலும், சிட்டுக்குருவியின் கூட்டை அமைப்பது தொடர்பாக பள்ளி மாணவர்கள் உட்பட பல தரப்பினருக்கு அவர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இதில் சிட்டுக்குருவி வசிக்கவும், உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த கூட்டை வெளிப்புறச் சுவரிலோ, மரத்திலோ எளிதாக பொருத்தி விட முடியும். குழந்தைகள் இந்த இயக்கத்தில் உற்சாகத்தோடு பங்கேற்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளிலே இந்த அமைப்பு, சிட்டுக்குருவிகளுக்கு 10,000 கூடுகளை உருவாக்கியிருக்கிறது.

நுாலகம்


கூடுகள் அறக்கட்டளையின் இந்த முன்னெடுப்பால், அப்பகுதிகளில் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. நீங்களும் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டால், சிட்டுக்குருவி நிச்சயம் மீண்டும் நம் வாழ்க்கையின் அங்கமாக ஆகிவிடும்.

கர்நாடகாவின் மைசூரில் உள்ள ஒரு அமைப்பு, குழந்தைகளுக்காக 'ஏர்லி பேர்டு' என்ற பெயரிலான இயக்கத்தை துவக்கி உள்ளது. இந்த அமைப்பு, பறவைகளை பற்றி குழந்தைகளுக்குப் புரிய வைக்க, சிறப்பானதொரு நுாலகத்தை நடத்துகிறது.

மேலும், நகரக் குழந்தைகளை கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, பறவைகளைப் பற்றி எடுத்துச் சொல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீராமுக்கு பாராட்டு

மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கோபாலன் என்பவர், 'பிரக்ரித் அறிவகம்' என்ற பெயரில் நுாலகத்தை துவக்கி இருக்கிறார். இதில், 3,000க்கும் அதிகமாக புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றைப் படிக்க குழந்தைகள் அதிகளவில் வருகின்றனர். இந்த நுாலகத்தில், புத்தகங்களைத் தவிர, பல வகையான செயல்பாடுகளும் கூட குழந்தை களை ஈர்க்கின்றன. கதை சொல்லும் அமர்வு, கலை பட்டறை, நினைவாற்றல் பயிற்சி வகுப்புகள், ரோபோட்டிக்ஸ் பாடம், மேடைப்பேச்சு என, பல செயல்பாடுகள் குழந்தைகளை கவர்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us