மஹாராஷ்டிராவில் மீண்டும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம்
மஹாராஷ்டிராவில் மீண்டும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம்
ADDED : பிப் 10, 2024 07:42 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் மராத்தா சமூக இடஒதுக்கீடு விவகாரத்தின் கோரிக்கைகள் வலியுறுத்தி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மீண்டும் போராட்டத்தை துவக்கி வைத்தார்.
மஹாராஷ்டிராவில், மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, அதன் தலைவரும், சமூக ஆர்வலருமான மனோஜ் ஜரங்கே கடந்த மாதம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார்.
அனைத்து மராத்தியர்களுக்கும் குன்பி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ், மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவின்படி, மாநில அமைச்சர்கள் இருவர் பேச்சு நடத்தினர். மராத்தா சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அப்போது அரசு தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக மனோஜ் ஜரங்கே அறிவித்தார்.
இந்நிலையில் ஜல்னா மாவட்டம் அந்தர்வாலி என்ற இடத்தில் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டத்தை துவக்கினார். இதனால் மீண்டும் பரபரப்பு காணப்படுகிறது.