மஹா.,வில் பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி முகம்; மக்களுக்கு நன்றி சொன்ன முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!
மஹா.,வில் பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி முகம்; மக்களுக்கு நன்றி சொன்ன முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!
ADDED : நவ 23, 2024 01:11 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. வாக்காளர்களுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நன்றி தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி நடந்து வருகிறது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் பா.ஜ., கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் பா.ஜ., மட்டும் 127 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இதனால் மஹா.,வில் பா.ஜ., தலைமையிலான ஆளும் மஹாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் நிலையில் உள்ளது. இதனால் பா.ஜ., கூட்டணி கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
அமோக வெற்றி
ஆளும் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், மஹாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு தொண்டர்கள் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். பின்னர் ஏக்நாத் ஷிண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாக்காளர்களுக்கு எனது நன்றிகள். இது மாபெரும் வெற்றி. மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று முன்பே கூறியிருந்தேன். அனைவருக்கும் நன்றி. சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்றார்.
'மோடி என்ற ஒருவர் இருக்கும் வரை எதுவும் சாத்தியம்' என துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.