ADDED : ஜூலை 18, 2025 08:22 PM
ஆக்ரா:தாஜ் மஹால் அருகே காருக்குள் கிடந்த முதியவர், தக்க சமயத்தில், காரின் கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து குடும்பமாக வந்த ஹரிஓம் தன்டாலே என்ற முதியவரை, காரில் இருக்க செய்து விட்டு, உடன் வந்தவர்கள், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்று விட்டனர்.
அப்படி சென்ற போது, காருக்குள், 'ஏசி'யை இயக்காமல் சென்று விட்டனர். இதனால், காருக்குள் வியர்த்து வழிந்த படி, இறக்கும் நிலையை அடைந்த அந்த முதியவர், உதவி கோரி காரின் கண்ணாடிகளை அடித்தார்.
இதை அறிந்த பார்க்கிங் நபர், உடனடியாக செயல்பட்டு, கார் கண்ணாடியை உடைத்து, அந்த முதியவரை மீட்டார்.
அப்போது அந்த முதியவர் மிகக் குறைந்த ஆடைகளுடன் இருந்தார். இதனால், அவரை வேண்டுமென்றே அவரின் குடும்பத்தினர் காரில் விட்டுச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
எனினும், தக்க சமயத்தில் அவரை மீட்டவர்களை பாராட்டினர்.