ADDED : ஜூன் 05, 2025 01:02 AM
பாலக்காடு; பாலக்காடு அருகே, மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பொல்ப்புள்ளி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி, 66. இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக தனியாருக்கு சொந்தமான தோப்பு வழி நடந்து சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள மோட்டார் ஷெட்டிற்கு செல்லும் ஒயர் கிடந்துள்ளது. தெரியாமல், ஒயரை மிதித்த தங்கமணியை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தங்கமணி வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை தேடி சென்ற போது, மோட்டார் ஷெட் அருகே, அவர் இறந்து கிடந்தது தெரிந்தது. அதன்பின், மின் இணைப்பை துண்டித்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, சித்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.