ADDED : ஜன 20, 2024 05:53 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாளை கேலிச்சித்திரக் கண்காட்சி மற்றும் பயிலரங்கம் நடத்தப்படுகிறது.
கர்நாடக தேர்தல் தலைமை அலுவலகம் வெளியிட்டு அறிக்கை:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக வரும் 21ம் தேதி நாளை காலை, 9:00 மணிக்கு, பெங்களூரு விதான் சவுதாவின் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள பசவண்ணர் சிலை அருகில் ஓவிய கலைஞர்களுக்கான கேலிச்சித்திரம் கண்காட்சி மற்றும் பயிலரங்கம் நடக்கிறது.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கேலிச்சித்திரங்கள் இடம் பெற்றிருக்கும். இவற்றில் இருந்து, 25 கார்ட்டூன்கள், ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு, பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும். இவற்றுக்கு கவுரவ நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.