
எஸ்.ஐ.ஆர்., பணிகள் நிறைவுக்குபின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும். உடனே, மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதியையும் அறிவிப்பர். அந்தப் பட்டியலின்படியே தேர்தல் நடத்தப்படும். இதன்மூலம் புதிய வாக்காளர் பட்டியலுக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது.
- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை!
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது புகார்கள் எழுகின்றன. தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கையை மீட்டெடுக்க, பாரம்பரிய முறையில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற வேண்டும். இந்த முறையை அமல்படுத்தினால் கூடுதல் நேரம் எடுக்கும் என தேர்தல் கமிஷன் கூறுவது முற்றிலும் நியாயமற்றது.
- மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
உரிமை இல்லை!
எஸ்.ஐ .ஆர்., பணிகளை, சட்டப்பூர்வமாக மேற்கொள்ள தேர்தல் கமிஷனுக்கு உரிமை இல்லை. ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் தவறு இருந்தால், அதை சரிசெய்ய இந்நடவடிக்கையை மேற்கொள்ளலாம்; ஒரு மாநிலம் முழுதும், மேற்கொள்ள முடியாது. இதற்கான காரணத்தை, மத்திய அரசு சபையில் தாக்கல் செய்ய வேண்டும்.
- மனோஜ் திவாரி, லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

