யமுனை நதியில் விஷம் கலந்துவிட்டதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
யமுனை நதியில் விஷம் கலந்துவிட்டதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ADDED : ஜன 28, 2025 10:18 PM

புதுடில்லி: யமுனை நதியில் ஹரியானா மாநில அரசு விஷம் கலப்பதாக குற்றம் சாட்டி இருந்த விவகாரம் தொடர்பாக, கெஜ்ரிவாலுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
யமுனை நதியில் ஹரியானா மாநில அரசு விஷம் கலப்பதாக டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுகள் எழுப்பி இருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, ஆதாரங்களுடன் ஜனவரி 29, 2025 அன்று இரவு 8 மணிக்குள் தனது பதிலை வழங்குமாறு ஆணையம் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில்,
தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொது நல்லிணக்கத்திற்கு எதிரான தவறான அறிக்கைகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறியிருப்பதாவது:
இத்தகைய குற்றச்சாட்டுகள் பிராந்திய குழுக்களுக்கும், அண்டை மாநிலங்களில் வசிப்பவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கிவிடும். சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.
எனவே புகாருக்கு உண்டான ஆதாரங்களுடன், ஜனவரி 29, 2025 அன்று இரவு 8 மணிக்குள் தனது பதிலை கெஜ்ரிவால் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.