தேர்தல் ஆணைய ‛‛தேசிய அடையாளம்'' பதவியிலிருந்து நடிகர் விலகல்
தேர்தல் ஆணைய ‛‛தேசிய அடையாளம்'' பதவியிலிருந்து நடிகர் விலகல்
ADDED : ஜன 11, 2024 07:12 PM

புதுடில்லி: தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி அப்பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்திய
தேர்தல் ஆணையம் , ஜனநாயக நாட்டில் மக்கள் வாக்களிப்பது கட்டாயம்
என்பதையும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பல்வேறு வழிகளில்
விழப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி
‛‛வாக்காளர் விழிப்புணர்வு'' திட்டத்தின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தின்
தேசிய அடையாளமாக நடிகர் பங்கஜ் திரிபாதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
ராஜிவ் குமார் கடந்தாண்டு நியமித்தார். இந்நிலையில் இன்று தனது
பொறுப்புகளிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றிய வரலாறு ‛மெய்ன் அட்டல் ஹூன் '' என்ற
பெயரில் ரவி ஜதாவ் இயக்கத்தில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இதி்ல்
வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். வரும் 19-ம்
தேதி வெளியாகிறது. திடீரென அரசியலில் குதிக்க இவர் முடிவு செய்துள்ளதாகவும்
இதையடுத்து அப்பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

