sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்கிரசுக்கு பதிலளிக்க தேர்தல் கமிஷன் தயார் !: தேர்தல் குறித்து சந்தேகம் எழுப்பியதால் அதிரடி

/

காங்கிரசுக்கு பதிலளிக்க தேர்தல் கமிஷன் தயார் !: தேர்தல் குறித்து சந்தேகம் எழுப்பியதால் அதிரடி

காங்கிரசுக்கு பதிலளிக்க தேர்தல் கமிஷன் தயார் !: தேர்தல் குறித்து சந்தேகம் எழுப்பியதால் அதிரடி

காங்கிரசுக்கு பதிலளிக்க தேர்தல் கமிஷன் தயார் !: தேர்தல் குறித்து சந்தேகம் எழுப்பியதால் அதிரடி


ADDED : டிச 01, 2024 05:06 AM

Google News

ADDED : டிச 01, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பாக, காங்கிரஸ் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், வரும் 3ம் தேதி நேரில் வரும்படியும் தலைமை தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.

மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், மஹாராஷ்டிராவில் காங்., பெரும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாகவும், ஓட்டு சதவீதம் குறித்தும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது பேசிய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் நடைமுறை குறித்து சந்தேகம் எழுப்பினார்.

கமிஷன் காட்டம்


இறுதியாக, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 'இதைத் தொடர்ந்து, 'ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையின் செயல்பாடுகள் சமரசம் செய்யப்படுவதாக, காங்கிரஸ் நம்புகிறது.

'தேர்தல் கமிஷனின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளால், நேர்மையான, சுதந்திரமான தேர்தல் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

'இதை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில், தேசிய அளவில் மிகப்பெரிய அளவிலான பிரசார இயக்கத்தை விரைவில் துவக்கவுள்ளோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஹரியானா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தபோதும், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. அதற்கு தேர்தல் கமிஷன் காட்டமாக பதில் அளித்தது.

இதனால், கோபமடைந்த காங்கிரஸ் தலைவர்கள், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், மீண்டும் காங்கிரஸ் குற்றம் சாட்டியதை அடுத்து, தலைமை தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்ப்பது முதல் அனைத்து நடவடிக்கைகளும், வெளிப்படையாகவே நடக்கின்றன. அனைத்து நிலைகளிலும், அரசியல் கட்சிகளின் பங்களிப்புடனே நடத்தப்படுகின்றன.

ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும்போது, ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் கட்சிகளின் பிரதிநிதிகள் இருப்பர்.

அதுபோலவே, ஓட்டு எண்ணிக்கையின்போதும், கட்சிப் பிரதிநிதிகள் இருப்பர். இவ்வாறு கட்சியினர் பங்களிப்பு இல்லாமல், தேர்தல் கமிஷனின் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை.

காங்கிரஸ் சந்தேகம்


இருப்பினும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஓட்டு சதவீதம் குறித்து, காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது.

எந்த ஒரு நியாயமான சந்தேகத்துக்கும் பதிலளிக்க தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது. வரும் 3ம் தேதி கட்சி பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம். அப்போது உரிய விளக்கங்கள் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'பொறுத்திருந்து பார்ப்போம்'

தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சி தலைவர் சரத் பவார் கூறியதாவது: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், இதை நிரூபிப்பதற்கு எங்களிடம் தற்போது ஆதாரங்கள் எதுவும் இல்லை. மஹாராஷ்டிரா தேர்தலில் பதிவான ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும் என, சிலர் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுக்க வேண்டும். இதில் எனக்கு பெரிய அளவில் நம்பிக்கையில்லை. ஆனாலும், என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us