'உச்ச நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் கமிஷன் பின்பற்றும்'
'உச்ச நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் கமிஷன் பின்பற்றும்'
ADDED : பிப் 18, 2024 12:26 AM

புவனேஸ்வர்,''தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றுவோம்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்துஉள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று கூறியதாவது:
அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் கமிஷன் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றுவோம்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம். லோக்சபா தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.