ADDED : மார் 16, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயலில் லோக்சபா தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக, தாசில்தார் ராம லட்சுமையா தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோலார் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இத்தொகுதிக்கு உட்பட்ட 8 சட்டசபைத் தொகுதிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தங்கவயலில் தேர்தல் பணிக்கான கட்டுப்பாட்டு அறையின் தொடர்புக்கு 89718 34616 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

