சாலையோரம் ஒப்புகைச்சீட்டு தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்
சாலையோரம் ஒப்புகைச்சீட்டு தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்
ADDED : நவ 08, 2025 11:43 PM

சமஸ்திபூர்: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 6ல் முடிந்தது. இதில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், 'விவிபேட்' எனப்படும், எந்த சின்னத்துக்கு ஓட்டளித்தோம் என்பதை காட்டும் ஒப்புகைச்சீட்டு கருவி பயன்படுத்தப்பட்டது.
இந்நி லையில், சமஸ்திபூர் மாவட்டம், சராய்ரஞ்சன் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி ஒன்றின் அருகே, சாலையோரம் ஒப்புகைச்சீட்டுகள் கிடந்தன. இது குறித்து சமஸ்திபூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரோஷன் குஷ்வாஹா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
அவை ஓட்டுப்பதிவு ஒத்திகையின் போது பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் என்பது தெரியவந்தது.
தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், 'சாலையில் கிடந்த ஒப்புகைச்சீட்டுகள் ஒத்திகையின் போது பயன் படுத்தபட்டவை. பணியில் அலட்சியமாக இருந்த உதவி தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்' என, கூறப்பட்டுள்ளது.

