sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் 121 சட்டசபை தொகுதிகளுக்கு... நாளை தேர்தல்; ஓட்டுப்பதிவு சுமுகமாக நடக்க பலத்த பாதுகாப்பு

/

பீஹாரில் 121 சட்டசபை தொகுதிகளுக்கு... நாளை தேர்தல்; ஓட்டுப்பதிவு சுமுகமாக நடக்க பலத்த பாதுகாப்பு

பீஹாரில் 121 சட்டசபை தொகுதிகளுக்கு... நாளை தேர்தல்; ஓட்டுப்பதிவு சுமுகமாக நடக்க பலத்த பாதுகாப்பு

பீஹாரில் 121 சட்டசபை தொகுதிகளுக்கு... நாளை தேர்தல்; ஓட்டுப்பதிவு சுமுகமாக நடக்க பலத்த பாதுகாப்பு

2


UPDATED : நவ 05, 2025 06:05 AM

ADDED : நவ 05, 2025 06:03 AM

Google News

2

UPDATED : நவ 05, 2025 06:05 AM ADDED : நவ 05, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹார் மாநிலத்திற்கான முதல் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது. 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் வன்முறையை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு நடக்கிறது. மொத்தம், 243 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி கடந்த சில தினங்களாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மாநிலம் முழுதும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் நடந்தன.

வாக்குறுதிகள் இதில் ஆட்சியை தக்க வைக்க ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான நட்டா ஆகியோர் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Image 1490781

அதேபோல், ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சியின் 'மஹாகட்பந்தன்' கூட்டணி சார்பில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல், அவரது சகோதரி பிரியங்கா, முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி ஆகியோர், வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மறுபுறம் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் 824 பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்தது.

இதுவரை 10 கோடி ரூபாய் ரொக்கம் உட்பட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

பிரசாரம் ஓய்ந்தது முதல் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5:00 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6:00 மணிக்கு முடிவடையும்.

ஓட்டுப்பதிவு சுமுகமாக நடக்கும் வகையில், தேர்தல் கமிஷன் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பதற்றமானவையாக கண்டறியப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

முதல்கட்ட தேர்தலில் பீஹார் துணை முதல்வரும் பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சாம்ராட் சவுத்ரி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உட்பட மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு இந்த தேர்தல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை தக்க வைப்பது மட்டும் அவர் முன் உள்ள சவால் இல்லை. தானும், தன் கட்சியும் வலுவாக உள்ளோம் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டிய தேர்தல் இது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ், கூட்டணியின் முக்கிய தலைவராக இருப்பார். இந்நிலையில், அவர் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. பிரதமர் பங்கேற்ற சில கூட்டங்களில் கூட அவரை காண முடியவில்லை.



பீஹாரில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் வாக்காளர்களின் ஆசையை துாண்டும் அறிவிப்புகளை போகிற போக்கில் அடித்து விடுகிறார் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறுகையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அடுத்த ஆண்டு ஜனவரி 14 மகர சங்கராந்தி அன்று மகளிருக்கு ஒரு முறை உதவித்தொகையாக 30,000 ரூபாய் வரவு வைக்கப்படும். நெல் மற்றும் கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை குவின்டாலுக்கு முறையே 300 மற்றும் 400 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்,” என்றார்.








      Dinamalar
      Follow us