தேர்தல் பத்திரத்துக்கு தடை: தீர்ப்பை ஆய்வு செய்யும் அரசு
தேர்தல் பத்திரத்துக்கு தடை: தீர்ப்பை ஆய்வு செய்யும் அரசு
ADDED : பிப் 17, 2024 05:02 AM

புதுடில்லி: தேர்தல் பத்திர விற்பனை திட்டம் செல்லாது என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திர விற்பனை, அரசியலமைப்புக்கு எதிரானது, மக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
நீதிமன்றம் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விபரங்களை வெளியிடுவது, வங்கி சட்டங்களுக்கு எதிரானது என, மத்திய அரசு கருதுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதும் அரசுக்கு கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பை, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.