ADDED : நவ 28, 2024 08:40 PM
விக்ரம் நகர்:மின்சார வாகனக் கொள்கையை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஆதிஷி சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஆதிஷி கூறியதாவது:
காற்றின் தரம் மோசமான நிலையிலேயே தொடர்வதால், மின்சார வாகனக் கொள்கையை வரும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதன்படி, ஜனவரி 1 முதல் மின்சார வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள மானியங்கள் மற்றும் சாலை வரி விலக்குகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் டில்லி பட்டியலின நிதி மற்றும் மேம்பாட்டுக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குவதற்காக 17 கோடி ரூபாய் மானியம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குரு நானக் கண் மையத்தில் இளங்கலையில் புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.