மின் செலவு ரூ.33 கோடி மிச்சம்: எப்படின்னு சொல்லித்தருது அசாம் அரசு!
மின் செலவு ரூ.33 கோடி மிச்சம்: எப்படின்னு சொல்லித்தருது அசாம் அரசு!
ADDED : டிச 15, 2024 09:59 PM

திஸ்பூர்: கடந்த 9 மாதங்களில், மின்சாரச் செலவில் ரூ.33 கோடிக்கு மேல் அரசு மிச்சப்படுத்தியுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
முன்னதாக, ஹிமந்தா பிஸ்வா சர்மா, துல்லியமான பில்லிங், தானியங்கி மின் துண்டிப்பு, தனிநபர் அளவீடு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சுயமாக பணம் செலுத்துதல் மற்றும் அரசு அலுவலகங்களில் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம் பணம் சேமிக்கப்பட்டது என தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருந்தார்.
அதை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
அரசு அலுவலகங்களில் பயன்பாடு இல்லாத நேரத்தில் தானாக துண்டிக்கப்பட்டதன் மூலம் மின் நுகர்வு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலச் செயலகத்தில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டதால் கட்டணமும் குறைந்துள்ளது.
அமைச்சர்கள், அதிகாரிகள் இப்போது தங்கள் சொந்த பில்களை செலுத்துகிறார்கள். இது அரசின் சேமிப்புக்கு வழிவகுத்து கொடுக்கிறது. கடந்த 9 மாதங்களில் ரூ. 33 கோடிக்கும் மேல் மின் செலவு மிச்சமாகி உள்ளது.
இவ்வாறு ஹிமந்தா பிஸ்வா கூறினார்.