தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/போட்ஸ்வானாவில் விருந்துக்காக யானைகளை கொல்ல அனுமதி

போட்ஸ்வானாவில் விருந்துக்காக யானைகளை கொல்ல அனுமதி

போட்ஸ்வானாவில் விருந்துக்காக யானைகளை கொல்ல அனுமதி


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கபோரோன்: தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் நடைபெற்றுவரும், 60-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களையொட்டி, பொது மக்களுக்கு விருந்து அளிக்க, 23 யானைகளைக் கொல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு உலகளாவிய விலங்கு நல மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

போட்ஸ்வானா நாடு, 60-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொது மக்களுக்கு விருந்து அளிப்பதற்காக, எட்டு மாவட்டங்களில் மொத்தம், 23 யானைகளை வேட்டையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சில கலைமான்களையும் கொல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேட்டைக்கான உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குப் பாதுகாப்புக்கும் மிக முக்கியமான யானைகளைக் கொன்று, அவற்றை விருந்துக்காக பயன்படுத்துவதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், ஆப்பிரிக்காவிலேயே மிக அதிகளவில் யானைகளைக் கொண்டுள்ள நாடாக விளங்குவதால், மனித -- விலங்கு மோதல்களைத் தவிர்க்கவும், அளவுக்கு அதிகமான யானைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் இந்நடவடிக்கை அவசியமானது என போட்ஸ்வானா அரசு வாதிடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us