தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இனியும் ஹேஷ்டேக் தேவையில்லை; சொல்லிவிட்டார் எலான் மஸ்க்!

இனியும் ஹேஷ்டேக் தேவையில்லை; சொல்லிவிட்டார் எலான் மஸ்க்!

இனியும் ஹேஷ்டேக் தேவையில்லை; சொல்லிவிட்டார் எலான் மஸ்க்!


ADDED : டிச 20, 2024 08:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 08:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஹேஷ்டேக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அது அசிங்கமாக இருக்கிறது என எக்ஸ் சமூகவலைதள உரிமையாளர் எலான் மஸ்க் அறிவுறுத்தி உள்ளார்.

ஹேஷ்டேக் என்பது சமூக வலைத்தளங்களில் உள்ள தலைப்புகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறிச்சொல். 2007ம் ஆண்டு டுவிட்டர் தளத்தில் பிறந்தது தான் இந்த ஹேஷ்டேக். சில செயல்கள், ரசிகர்களின் செயல்பாடுகள், சில விசேஷங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்க உருவானது தான் இந்த ஹேஷ்டேக். அதன் பிறப்பிடமான டுவிட்டர் சமூகவலைதளத்தை, தொழில் அதிபர் எலான் மஸ்க் வாங்கிவிட்டார். பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குருவி படம் இருந்த, லோகோவை மாற்றினார்.

டுவிட்டர் என்ற பெயரை 'எக்ஸ்' என மாற்றினார். ஆனால் மக்கள் மத்தியில் இந்த பெயர் எடுபடவில்லை. டுவிட்டர் என்று பயனர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில், ஹேஷ்டேக் பயன்படுத்த வேண்டாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். சிஸ்டத்துக்கு இனியும் அவை தேவையில்லை. ஹேஷ்டேக் அசிங்கமாகத் தெரிகின்றன. இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us