UPDATED : மே 07, 2025 03:39 AM
ADDED : மே 07, 2025 03:12 AM

லாகூர்: இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இன்று(மே 07) நடத்திய அதிரடி தாக்குதலையடுத்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் இரு வாரங்களுக்கு பிறகு இன்று நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதிலடி தாக்குதலை துவங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‛சிந்தூர் மிஷன்' என பெயரிட்டுள்ளது
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் பாகிஸதான், லாகூர், பஞ்சாப் நகரங்களில் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் லாகூர் தாக்குதலால் லாகூர் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.