ADDED : ஜன 27, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாவணகெரே -பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது.
தாவணகெரே நகரின், அரசு பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள, பள்ளி மைதானம் அருகில், நேற்று காலை சூட்கேஸ் ஒன்று, நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடந்தது. மதியம் இதை அப்பகுதியினர் கவனித்தனர்.
குடியரசு தினம் கொண்டாடுவதால், பயங்கரவாதிகள் சூட்கேசில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என, மக்கள் பயந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த, தாவணகெரே போலீசார், மோப்ப நாயை வரவழைத்தனர். சூட்கேசை சோதனையிட்டபோது, அது காலியான சூட்கேஸ் என்பது தெரிந்தது. அதன்பின் அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது.

