ஜம்மு - காஷ்மீரில் 'என்கவுன்டர்': 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீரில் 'என்கவுன்டர்': 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ADDED : செப் 29, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தின் ஆதிகம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, அங்கு போலீசாருடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத் துவங்கினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்கு தலில், இரண்டு பயங்கரவாதிகள்கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே, சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.