ஜார்க்கண்டில் நேற்று என்கவுன்டர்; இன்று நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!
ஜார்க்கண்டில் நேற்று என்கவுன்டர்; இன்று நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!
ADDED : செப் 25, 2025 03:48 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 10 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். நேற்று என்கவுன்டரில் நக்சலைட்டுகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப் பட்டனர். இதையடுத்து ஜார்க்கண்ட் டிஜிபி அனுராக் குப்தா, 'கும்லாவில் குப்தா பேசுகையில், '2026ம் ஆண்டின் விடியலை நக்சலைட்டுகள் பார்க்க முடியாது. ஆயுதங்களை கீழே போட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (செப் 25) ஜார்க்கண்ட் அரசின் நக்சலைட்டுகள் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் மாநில போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்திருந்த சரணடைதல் நிகழ்ச்சியின் போது, சாய்பாசாவில் நான்கு பெண்கள் உட்பட சிபிஐ அமைப்பை சேர்ந்த நக்சலைட்டுகள் 10 பேர் சரண் அடைந்தனர். அவர்கள் தங்களது ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒரே நேரத்தில் 10 பேர் சரணடைந்தது என்பது இதுவே மிகப்பெரிய சமீப காலங்களில் எண்ணிக்கை ஆகும். நக்சலைட்டுகள் செயல்பாடு தற்போது பெரும்பாலும் சரண்டா காடுகளுக்குள் மட்டுமே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர், அங்கு ஒரு சில நக்சலைட்டுகள் மறைந்திருப்பதாகவும், ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பதாகவும் தெரிகிறது. இந்த வெடிபொருட்கள் காரணமாக பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.