தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை


ADDED : ஆக 02, 2025 02:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2025 02:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து, பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவன் படுகாயம் அடைந்துள்ளான். அப்பகுதியில், மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

முன்னதாக இன்று காலை, குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். இந்த ராணுவ நடவடிக்கைக்கு 'ஆப்பரேஷன் அகல்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us