ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் என்கவுன்டர்; ராணுவம் அதிரடி
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் என்கவுன்டர்; ராணுவம் அதிரடி
UPDATED : ஏப் 23, 2025 11:29 AM
ADDED : ஏப் 23, 2025 09:47 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஹல்காமுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சின்னாறு எல்லை பகுதியில் பாகிஸ்தானில் இருந்து 2 அல்லது 3 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை கண்ட ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ராணுவம் தரப்பில் கூறுகையில், 'எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நிறைய ஆயுதங்களும், வெடிபொருட்களும் பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,' எனக் கூறப்பட்டுள்ளது.