ADDED : ஜன 25, 2024 05:26 AM

தங்கவயல் : தங்கவயலில் பெரும்பாலான மழைநீர் கால்வாய்கள், ஏரிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போகின்றன.
தங்கவயலில் உரிகம்பேட்டை -- பெத்தப்பள்ளி சாலையில் 30 அடி அகல மழை நீர் கால்வாய் இருந்தது. அந்த கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீட்டு மனையாக்கி உள்ளனர். இதனால் அதிகளவு மழை பெய்யும் போது, மழைநீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. இது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
உரிகம்பேட்டை -- பவர்லால் பேட்டை பகுதியில் உள்ள கால்வாய் மற்றும் அதனையொட்டி இருந்த இடுகாட்டைக் காணவில்லை.
ராபர்ட்சன்பேட்டை கவுதம் நகரின் கவுடனகெரே ஏரியும் மெல்ல அழிந்து வருவதாக புகார் எழுந்தது. அரசு நில ஆக்கிரமிப்பால், தாசில்தார் முன்னிலையில் சர்வே நடத்தப்பட்டது. இது போல் மஸ்கம் ஏரியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
சொர்ணகுப்பம் ஏரி மற்றும் அதன் கால்வாய் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடக்கிறது.
தங்கவயலில் ஏரி, கால்வாய், நில ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள், அரசுக்கு புகார் அளித்துள்ளனர்.