ADDED : அக் 24, 2024 03:35 PM

புதுடில்லி: நாடு முழுவதும் 14 நகரங்களில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், இந்திய ரூபாய் மற்றும் பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்ட ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் 6,410 ஈரோ , 3062 அமெரிக்க டாலர், 5 சிங்கப்பூர் டாலர் மற்றும் 2,750 சுவிஸ் பிராங்க்ஸ் உள்ளிட்ட கரன்சிகள் அடங்கும். கடந்த வாரம் ரெய்டு நடந்தது என இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அந்நிய செலாவணி சட்டம்- 1999ன் கீழ் இந்த சோதனை நடத்தினோம். கரன்சிகளுடன் டிஜிட்டல் டிவைசஸ் மற்றும் பல்வேறு முறைகேடான பத்திரங்களை பறிமுதல் செய்தோம்.
பல்வேறு குழுக்கள் ஒன்றாக இணைந்து, மொஹாலி (பஞ்சாப்) புதுடில்லி, நொய்டா, காசியாபாத் (உ.பி) மற்றும் மும்பை (மஹாராஷ்டிரா) உள்ளிட்ட 14 நகரங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வியூநவ் மார்க்கெட்டிங் சர்வீஸ் நிறுவனம், வியூநவ் இன்போடெக் நிறுவனம் மற்றும் ஷெ பிடி ரென்டல் நிறுவனம், புள்ளிவிபர சேவை நடவடிக்கையில் உள்ள சில நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து ரூபாய் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தோம்.
முறைகேடாக வெளிநாட்டு கரன்சிகளை கையாண்டது குறித்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

