முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 8-வது சம்மன்
முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 8-வது சம்மன்
ADDED : ஜன 15, 2024 11:39 PM

புதுடில்லி: சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு, நில அபகரிப்பு வழக்குகளில் ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன், 48, உள்ளார். இம்மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் அத்துடன், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிக்கப்பட்ட நிலங்கள் முதல்வர் ஹேமந்த் சோரன் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இவர் மீதான வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே ஏழு முறை அமலாக்க துறை சம்மன் அனுப்பியது. இதுவரை ஹேமந்த் சோரன் ஆஜராகாத நிலையில் எட்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பி, வரும் ஜன.16 முதல் 20-ம் தேதிக்குள் ஆஜராகி வாக்குமூலம் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.