4வது முறையாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்: ஆஜர் ஆகுவாரா?
4வது முறையாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்: ஆஜர் ஆகுவாரா?
UPDATED : ஜன 13, 2024 11:05 AM
ADDED : ஜன 13, 2024 09:39 AM

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், 4வது முறையாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. முன்னதாக 3 முறை அனுப்பிய சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்து விட்டார்.
டில்லி அரசின் 2021- 2022ம் நிதியாண்டின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நவம்பர் 2ம் தேதி ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், இது சட்டவிரோதமான விசாரணை எனக்கூறி கெஜ்ரிவால் அதை நிராகரித்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த டிச.,21ம் தேதி ஆஜராகுமாறு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது. அதையும் கெஜ்ரிவால் புறக்கணித்து விட்டார். இதையடுத்து அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பி, விசாரணைக்கு ஜன. 3ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதையும் கெஜ்ரிவால் புறக்கணித்து விட்டார். இந்நிலையில், 4வது முறையாக ஜன.,18ம் தேதி ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.