பணம் பறிக்கும் துறையாக மாறிய அமலாக்கத்துறை: ராகுல் குற்றச்சாட்டு
பணம் பறிக்கும் துறையாக மாறிய அமலாக்கத்துறை: ராகுல் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 07, 2024 11:46 AM

ஐதராபாத்: ‛‛அமலாக்கத்துறை பணம் பறிக்கும் துறையாக மாறி உள்ளது'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஒட்டு கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் இதனை மேற்கோள் காட்டி ராகுல் பேசியதாவது: தெலுங்கானாவில் முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ் செய்ததை, டில்லியில் பிரதமர் மோடி செய்து வருகிறார். அமலாக்கத்துறை, பணம் பறிக்கும் அமைப்பாக மாறி உள்ளது.
காங்கிரஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பது தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். 40 ஆண்டுகள் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. ஆனால், தெலுங்கானா அரசு 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கி உள்ளது. இன்னும் 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

