அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஊழலுக்கு எதிராக போராடுவது இல்லை: ராகுல் குற்றச்சாட்டு
அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஊழலுக்கு எதிராக போராடுவது இல்லை: ராகுல் குற்றச்சாட்டு
ADDED : பிப் 10, 2024 03:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் ஐ.டி ஆகியவை ஊழலுக்கு எதிராக போராடுவது இல்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஊழல்வாதிகளின் பொற்காலம் நடக்கிறது. ரூ. 777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை ஒரே ஆண்டில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் 'திட்டமிடுவதற்கு' பதிலாக 'மாடலிங்' தான் செய்கிறார். மேலும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் ஐ.டி ஆகியவை ஊழலுக்கு எதிராக போராடுவது இல்லை. மாறாக ஜனநாயகத்திற்கு எதிராக போராடுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் தெரிவித்துள்ளார்.