டில்லியில் மேலும் ரூ.1 கோடி ரொக்கம், 8 கோடி ரூபாய் மதிப்பு நகை பறிமுதல்
டில்லியில் மேலும் ரூ.1 கோடி ரொக்கம், 8 கோடி ரூபாய் மதிப்பு நகை பறிமுதல்
UPDATED : ஜன 01, 2026 11:15 PM
ADDED : ஜன 01, 2026 06:09 PM

புதுடில்லி: டில்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நேற்று(டிச.,31) 5.12 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று(ஜன.,01) மேலும் 1.22 கோடி ரூபாய் மற்றும் 8.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த வழக்கில் டில்லியில் சர்வ்பிரியா விஹார் பகுதியில் இந்தர்ஜித் சிங் யாதவ் என்பவன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 5.12 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 9 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று இதே பகுதியில் சுனில் குப்தா என்பவனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தர்ஜித் சிங் யாதவின் கூட்டாளியான அமன் சிங் என்பவனுக்கு இந்த சுனில் குப்தா கடன் கொடுத்துள்ளார். ஆனால், இந்தர்ஜித் சிங் யாதவ் குறித்து அமலாக்கத்துறை விசாரணையை துவக்கிய உடன் அமன் சிங் பெரிய அளவில் பணத்தை சுனில் குப்தாவுக்கு மாற்றி குற்றத்தை மறைக்க முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து சுனில் குப்தாவுக்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையில் 1.22 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 8.50 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

