தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பஞ்சாப் வர்த்தக அமைச்சர் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

 பஞ்சாப் வர்த்தக அமைச்சர் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

 பஞ்சாப் வர்த்தக அமைச்சர் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை


ADDED : ஏப் 17, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 06:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லூதியானா: பஞ்சாப் மாநில தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் சஞ்சீவ் அரோரா மற்றும் அவரது குடும்பத்தினர், நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அவரது அமைச்சரவையில் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருப்பவர் சஞ்சீவ் அரோரா.

இவர், இவரது மகன் காவ்யா அரோரா, தொழிலதிபர்கள் ஹேமந்த் சூட், சந்திரசேகர் அகர்வால் ஆகியோர் மீது, 'பெமா' எனப்படும், அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமீறலுக்காக அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது.

ரகசிய தகவல்களை அறிந்து பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டது, சூதாட்டம் மூலம் ஈட்டிய பணத்தை மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக லூதியானா, ஜலந்தர், குருகிராம் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 13 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அமைச்சர் அரோரா, அவரது மகன் கவ்யா அரோரா, அவர்களது ரியல் எஸ்டேட் நிறுவனமான, 'ஹாம்ப்டன் ஸ்கை ரியால்டி லிமிடெட்' அலுவலகங்கள், பங்குச்சந்தை தரகர் ஹேமந்த் சூட், ஜலந்தரைச் சேர்ந்த தொழிலதிபர் சந்திரசேகர் அகர்வால் ஆகியோர் இடங்களில் இந்த சோதனை நடந்தது.

இது குறித்து அமைச்சர் சஞ்சீவ் அரோரா வெளியிட்ட அறிக்கையில், 'விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். வாய்மையே வெல்லும்' என, கூறியுள்ளார்.

சமீபத்தில் ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., அசோக் மிட்டல் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போதைய சோதனை கட்சி நிர்வாகிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us