நான் நேர்மையற்றவன் எனில் என்னை தூக்கிலிடுங்கள்; பிரதமர் மோடி
நான் நேர்மையற்றவன் எனில் என்னை தூக்கிலிடுங்கள்; பிரதமர் மோடி
UPDATED : மே 17, 2024 12:07 AM
ADDED : மே 16, 2024 08:50 PM

புதுடில்லி: முந்தை காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை என்பது ஒரு பயனற்ற அமைப்பாக இருந்தது என பிரதமர் மோடி டி.வி. செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏழு கட்ட லோக்சபா தேர்தலில் இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பா.ஜ., கூட்டணி 400 இடங்களுக்கு மேல் பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா டுடே செய்தி சேனலுக்கு பிரதமர் மோடி அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி,
* மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைந்ததும் 100 நாள் திட்டம் என்பதை 125 நாள் திட்டம் கொண்டு வரப்படும். இதில் இளைஞர்களுக்காக 25 நாட்கள் ஒதுக்கப்படும் .
* தேர்வு எழுதும் உங்கள் குழந்தை 100க்கு 99 மதிப்பெண் பெறுவதே இலக்காக கொண்டுள்ளதோ அது போன்றே இத்தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களை பெறுவதே எனது இலக்கும், கடமையும் ஆகும். எனவே ஒரு தலைவனாக நான் பொறுப்பேற்கிறேன்.
*பா.ஜ. ஆட்சியில் எப்போதும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகத்தான் செயல்பட்டு வருகிறது.
* முந்தை காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை பயனற்ற அமைப்பாக இருந்தது. ஆனால் பா.ஜ.,ஆட்சியில் அமலாக்கத்துறை திறம் பட செயல்பட்டு வருகிறது.
* பா.ஜ.வில் இணையும் அல்லது கூட்டணி வைக்கும் அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ,. வருமானவரித்துறை ஆகிய அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் எதிர்க்கட்சி தலைவர்களை மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
* கடந்த 2004- 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது. அவர்களுக்கு என்ன வேலை ? தற்போது அமலாக்கத்துறை தன் கடமையை செய்கிறது.
* அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பிதர அரசு திட்டமிட்டுள்ளோம்.
* ஓரு தேசம், ஒரு தேர்தல் என்பது பா.ஜ.,வின் குறிக்கோள். இது நாட்டிற்கு மிகவும் அவசியமானது.
* கடந்த 7 ஆண்டுகளி்ல் 6 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி பேர்கள் கடனுதவி பெற்றுள்ளனர்.
* கடந்த 60 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் ஒற்றை உறுப்பினர் அமைப்பாக இருந்தது. அதிலிருந்து வெளியே வந்த அதிகாரிகள் கவர்னர்களாக, எம்.பி.க்களாக , அத்வானிக்கு எதிராக போட்டியிட்டவர்களாக இருந்துள்ளனர்.
*தேர்தலின் போது உலகம் முழுதும் உள்ள ஊடக நிறுவனங்களை இந்தியாவிற்கு அழைக்க வேண்டும்.
*நான் நேர்மையற்றவன் எனில் என்னை தூக்கிலிடுங்கள். எனது நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்களை நான் மதிப்பேன்.குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.