sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய சுழல் வீரர்கள் வலையில் சிக்கிய இங்கி., அணி: 5வது டெஸ்டில் 218 ரன்களுக்கு சுருண்டது

/

இந்திய சுழல் வீரர்கள் வலையில் சிக்கிய இங்கி., அணி: 5வது டெஸ்டில் 218 ரன்களுக்கு சுருண்டது

இந்திய சுழல் வீரர்கள் வலையில் சிக்கிய இங்கி., அணி: 5வது டெஸ்டில் 218 ரன்களுக்கு சுருண்டது

இந்திய சுழல் வீரர்கள் வலையில் சிக்கிய இங்கி., அணி: 5வது டெஸ்டில் 218 ரன்களுக்கு சுருண்டது


UPDATED : மார் 07, 2024 06:40 AM

ADDED : மார் 07, 2024 03:09 PM

Google News

UPDATED : மார் 07, 2024 06:40 AM ADDED : மார் 07, 2024 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மசாலா: இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்கள் கைப்பற்றினர். முதல்நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்., இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது.

Image 1241646
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. பின் எழுச்சி பெற்ற இந்திய அணி, அடுத்த மூன்று டெஸ்டில் வெற்றி பெற்று, 3-1 என்ற முன்னிலையுடன் கோப்பையை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று (மார்ச் 7) தர்மசாலாவில் துவங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
Image 1241644
அதன்படி கிராலே, டக்கெட் ஆகியோர் இங்கி., அணிக்கு துவக்கம் தந்தனர். ஸ்கோர் 64ஐ எட்டியபோது இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். டக்கெட் (27), போப் (11), கிராலே (79), 100வது டெஸ்டில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் (29) என அடுத்தடுத்து குல்தீப் சுழலில் சிக்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 26 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஸ்டோக்ஸ் 'டக் அவுட்' ஆகி ஏமாற்றினார்.
Image 1241645
100வது டெஸ்ட் விளையாடும் அஸ்வின் சுழலில் டாம் ஹார்ட்லே (6), மார்க் உட் (0), பென் போகஸ் (24), ஆண்டர்சன் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை துவக்கியது. துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினர். பஷீரின் ஒரே ஓவரில் ஜெய்ஸ்வால் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். அரைசதம் கடந்த அவர், 57 ரன்னில் 'ஸ்டம்ப்' அவுட்டானார். ரோகித் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடினார். மறுமுனையில் ரோகித் அரைசதம் கடந்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. ரோகித் (52), சுப்மன் கில் (26) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தற்போது 83 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணி, நாளைய 2ம் நாள் ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்குமா என பார்க்கலாம்.






      Dinamalar
      Follow us