டாக்டர்களின் பாதுகாப்பை அதிகரியுங்கள்: மாநில அரசுகளுக்கு அறிவுரை
டாக்டர்களின் பாதுகாப்பை அதிகரியுங்கள்: மாநில அரசுகளுக்கு அறிவுரை
UPDATED : செப் 04, 2024 06:41 PM
ADDED : செப் 04, 2024 05:42 PM

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் இளம் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தங்களின் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி அனைத்து மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி.,களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் அபூர்வா சந்திரா அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: நோயாளிகள், பொது மக்கள் அதிகம் வரும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான நடவடிக்கைகளை உறுதிபடுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் குறித்து செப்.,10ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.