ADDED : அக் 09, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
ரத்தசோகை மற்றும் நுண்ணுாட்டச் சத்து குறைபாட்டை போக்கும் வகையில், 17,082 கோடி ரூபாய் செலவில், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ், விலையில்லா செறிவூட்டப்பட்ட அரிசி, 2028ம் ஆண்டு வரை 17,082 கோடி ரூபாய் செலவில் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
குஜராத்தின் லோத்தல் நகரில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த வளாகத்தை மேம்படுத்தியவுடன் நேரடியாக 15,000, மறைமுகமாக 7,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

