தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'செறிவூட்டப்பட்ட அரிசி அனைவரும் சாப்பிடலாம்'

'செறிவூட்டப்பட்ட அரிசி அனைவரும் சாப்பிடலாம்'

'செறிவூட்டப்பட்ட அரிசி அனைவரும் சாப்பிடலாம்'


ADDED : அக் 19, 2024 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 01:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பொது மக்களிடையே ரத்த சோகை மற்றும் நுண்ணுாட்டச் சத்து குறைபாட்டை குறைக்கும் நோக்கில், 17,082 கோடி ரூபாய் செலவில், உணவுச் சட்டத்தின் கீழ் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை, 2028ம் ஆண்டு வரை தொடர அரசு முடிவு செய்துள்ளது.

அரிசி செறிவூட்டல் முறையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பரிந்துரைத்த தரத்தின்படி, வழக்கமான அரிசியுடன் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றை சேர்ப்பர்.

இந்நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலசீமியா மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட ரத்த சிவப்பணு பாதிப்புடைய நபர்கள் உட்பட அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொள்ளலாம்; பாதுகாப்பானது. இதை, அறிவியல் சான்றுகளும் உறுதி செய்கின்றன.

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2018ன்படி, முன்பு செறிவூட்டப்பட்ட அரிசி பைகளில், தலசீமியா மற்றும் ரத்த சோகை இருப்பவர்களுக்கு சுகாதார எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

பிற நாடுகளில் இது போல் எச்சரிக்கை வாசகங்கள் இல்லாததை சுட்டிக்காட்டி அறிவியல் குழு கேள்வி எழுப்பியது.

அதன் பின், உணவு மற்றும் பொது வினியோகத் துறை ஒரு குழுவை அமைத்து, ஹீமோகுளோபினோபதி பாதிப்பு உள்ளவர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி பாதுகாப்பானதா என ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

அவர்கள் அளித்த அறிவியல் சான்றுகள்படி, செறிவூட்டப்பட்ட அரிசி தலசீமியா மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு எந்த உடல்நலப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது உறுதியானது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us