'ஓட்'டத்தான் விழிப்புணர்வு உற்சாகத்தில் ஆர்வலர்கள்
'ஓட்'டத்தான் விழிப்புணர்வு உற்சாகத்தில் ஆர்வலர்கள்
ADDED : மார் 18, 2024 06:20 AM

மாரத்தஹள்ளி, : ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், பெங்களூரு மாநகராட்சி, காவேரி மருத்துவமனை இணைந்து நேற்று மாரத்தஹள்ளியில் 'ஓட்'டத்தான் விழிப்புணர்வு நடத்தியது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை நடிகை பிரணீதா துவக்கி வைத்தார். 500 இரு சக்கர வாகனங்கள், 1,200 சைக்கிள்கள் பங்கேற்ற வாக்கத்தானில், பெண்கள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நடிகை பிரணீதா பேசியதாவது:
ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தலில், அனைவரும் ஓட்டு போட வேண்டும்.
குறிப்பாக பெண்கள் அதிக அளவில் ஓட்டுச் சாவடிக்கு செல்ல வேண்டும். மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஊக்கமளிக்கிறது.
குடிமக்கள் என்ன விரும்புகின்றனர்; என்ன இல்லை; நாட்டின் வளர்ச்சிக்கான தேவையை உணர்ந்து ஓட்டு உரிமையை அவசியம் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், பெங்களூரு மாநகராட்சி இணைந்து நடத்திய 'ஓட்'டத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஆர்வத்துடன் பங்கேற்ற ஆர்வலர்கள். இடம்: மாரத்தஹள்ளி, பெங்களூரு.

