தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இமயமலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்; நிலநடுக்க அபாயம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

இமயமலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்; நிலநடுக்க அபாயம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

இமயமலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்; நிலநடுக்க அபாயம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்


ADDED : நவ 29, 2025 09:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 09:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இமயமலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்திய நிலப்பரப்பில் 61 சதவீதம் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள இந்தியாவின் நிலநடுக்கம் அபாயமுள்ள பகுதிகளின் புதிய வரைபடம் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரைபடத்தில் இந்தியாவில் உள்ள 61 சதவீதம் நிலப்பரப்புகளில் மிதமான முதல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும் மண்டலம் IV மற்றும் Vல் இருந்த இமயமலை, தற்போது மண்டலம் VIல் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்த இமயமலை பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த இமயமலையும் ரொம்ப ஆபத்தானது என்ற பிரிவுக்குள் வந்துள்ளது.

பூமிக்கு அடியில் இந்திய தட்டு ஒவ்வொரு ஆண்டும் 5 செ.மீ., வரை மேல்நோக்கி நகர்கிறது. யூரேசியத் தட்டுடன் இடைவிடாமல் மோதுவதால் தான், இமயமலையை இன்னும் உயரமாக்குகிறது. நகர்ப்புறங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், பிஐஎஸ் வெளியிட்டுள்ள இந்தப் புதிய வரைபடம் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது.

எனவே, இமயமலைக்கு அடிவாரத்தில் இருக்கும் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் போன்ற நகரங்களை இன்னும் கூடுதல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாலங்கள், வீடுகள் போன்ற கட்டுமானங்களை, நிலநடுக்கத்தை தாங்கும் மாதிரியானவையாக அமைக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us