ADDED : பிப் 28, 2024 07:03 AM

ஹூப்பள்ளி, : ''துவாரகைக்கு பிரதமர் நரேந்திர மோடி மயில் தோகையுடன் சென்றது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருப்பது ஏற்புடையதல்ல,'' என பா.ஜ., முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
துவாரகையில் கடலில் பிரதமர் நரேந்திர மோடி, மயில் தோகையுடன் சென்றது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருப்பது ஏற்புடையதல்ல.
மல்லிகார்ஜுன கார்கேவை விமர்சிப்பதில் அர்த்தமில்லை. நமது மதம், கலாசாரம், பாரம்பரியத்தை காப்பாற்றும் பணியை மோடி செய்து வருகிறார். நாடு முழுதும் புனித தலங்களை மேம்படுத்தி வருகிறார்.
கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிகர் இருந்தபோது, கலசா பண்டூரி திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

