ADDED : டிச 10, 2024 07:19 AM

பெலகாவி: பெலகாவியில் எத்னால், நேற்று அளித்த பேட்டி:
எடியூரப்பா, தன் சமுதாயத்தின் மற்ற தலைவர்களை வளர விடமாட்டார். ஜெகதீஷ் ஷெட்டர், சிவப்பாவை வளரவிடவில்லை. மல்லிகார்ஜுனை என்ன செய்தார்? சிவப்பாவை அரசியல் ரீதியில் எப்படி ஒழித்து கட்டினார் என்பது, எங்களுக்கு தெரியும்.
என்னையும் கூட அரசியல் ரீதியில் ஒழிக்க முயற்சிக்கிறார். விஜயபுராவில் எனக்கு எதிராக, அணி திரட்டுகின்றனர்.
எடியூரப்பா பேச்சின் பின்னணியில், என்ன சதி உள்ளது என, தெரியவில்லை. மத்திய தலைவர்களை குஷிப்படுத்த, எடியூரப்பா பேசுகிறார்.
சிவகுமார் முதல்வரானால், மாநிலத்தின் கதி அவ்வளவுதான். அவர் துணை முதல்வராக இருப்பதே, மாநிலத்தின் துரதிர்ஷ்டம்.
ஏன் என்றால் இப்படிப்பட்ட ஊழல்வாதி, கொள்ளை அடிப்பவரை பார்த்ததே இல்லை.
கொரோனா முறைகேடு குறித்து, தைரியம் இருந்தால் அரசு விசாரணை நடத்தட்டும். யார், யார் முறைகேட்டில் தொடர்பு கொண்டனர் என்பது வெளிச்சத்துக்கு வரட்டும்.
அதில் காங்கிரசாரும் இருக்க வேண்டும். விசாரணை நடத்தட்டும் நான் அன்றே கூறியிருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

