sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரு நிமிடத்தில் 3 முறை இந்திய பொருளாதாரம் இறந்த பொருளாதாரம் என குறை கூறிய ராகுல்: EU தலைவர் குட்டு

/

ஒரு நிமிடத்தில் 3 முறை இந்திய பொருளாதாரம் இறந்த பொருளாதாரம் என குறை கூறிய ராகுல்: EU தலைவர் குட்டு

ஒரு நிமிடத்தில் 3 முறை இந்திய பொருளாதாரம் இறந்த பொருளாதாரம் என குறை கூறிய ராகுல்: EU தலைவர் குட்டு

ஒரு நிமிடத்தில் 3 முறை இந்திய பொருளாதாரம் இறந்த பொருளாதாரம் என குறை கூறிய ராகுல்: EU தலைவர் குட்டு

63


UPDATED : ஜன 23, 2026 09:25 PM

ADDED : ஜன 22, 2026 07:35 AM

Google News

UPDATED : ஜன 23, 2026 09:25 PM ADDED : ஜன 22, 2026 07:35 AM

63


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது சிறப்பு நிருபர்

இந்திய பொருளாதாரம் இறந்த நிலையில் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் கருத்துக்கு மத்தியில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இந்தியாவின் வளர்ச்சியைப் பாராட்டினார்.

தாய்நாட்டை அந்நிய மண்ணில் குறைத்து பேசுவதை வழக்கமாக ராகுல் கொண்டுள்ளார். அவர் அண்மை காலமாக இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அவர் கூறியதாவது: இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

டிரம்ப் சரியாக தான் சொல்லி இருக்கிறார். அவர் உண்மையை சொல்லி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு இறந்த பொருளாதாரம் என்றால் வேறு என்ன? இது உங்களுக்குத் தெரியாதா? இந்தியப் பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம். இவ்வாறு காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியிருந்தார்.

இந்த சூழலில் ராகுலின் கருத்து தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறியதாவது: டாவோஸ் மாநாட்டிற்குப் பிறகு, அடுத்த வார இறுதியில் நான் இந்தியாவிற்குப் பயணம் செய்யவுள்ளேன். இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. ஆனால் நாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா உடன் மேற்கொள்ள இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம்.

உண்மையில், சிலர் இந்தியா உடனான இந்த ஒப்பந்தம், எல்லா ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று அழைக்கிறார்கள். அது 200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும், இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டிருக்கும். மேலும் முக்கியமாக, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியாவுக்கும், மிகவும் ஆற்றல்மிக்க ஐரோப்பாவிற்கும் இது ஒரு அபரிமிதமான நன்மையை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் இந்திய பொருளாதாரம் குறித்து குறைத்து மதிப்பிட்டு கருத்து தெரிவித்த இருந்த நிலையில், இந்திய பொருளாதார வளர்ச்சியை ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பாராட்டி இருப்பது முக்கியத்தும் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.

ராகுல் இந்திய பொருளாதாரம் இறந்தது என கூறிய போதே, நெட்டிசன்கள் காட்டமாக கண்டித்து பதிலடி கொடுக்கும் வகையில் கமென்ட் செய்தனர். பொருளாதார நிபுணர்கள் மத்தியிலும் ராகுலின் கருத்து எதிர்ப்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

27 உறுப்பு நாடுகள்

ஐரோப்பிய ஆணையம் என்பது 27 உறுப்பு நாடுகளை கொண்ட அமைப்பாகும். உலக பொருளாதாரத்தில் எப்போதும் நல்ல நிலையில் இருப்பது ஐரோப்பிய நாடுகள் தான். இந்த ஆணையத்தின் தலைவர் இந்திய பொருளாதாரத்தை பாராட்டி உள்ளார்.






      Dinamalar
      Follow us