இந்தியா வழியாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தகம்: எவ்வளவு தெரியுமா?
இந்தியா வழியாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தகம்: எவ்வளவு தெரியுமா?
UPDATED : ஜன 13, 2024 01:24 PM
ADDED : ஜன 13, 2024 10:12 AM

புதுடில்லி: உக்ரைன் மீதான போருக்குப் பின்னர் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்தன. ஆனால், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு விநியோகிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தது.
115 சதவீதம்
ஆனால், இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து ரஷ்யா உறவை இந்தியா பேணி வருகிறது. அதேபோல் மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா நல்லுறவை நீடித்து வருகிறது.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய், இந்தியா மலிவு விலையில் கொள்முதல்
செய்கிறது. உள்நாட்டில் சுத்திகரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
போருக்கு முன்னர், ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத கச்சா எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் வாங்கின. ஆனால், பொருளாதார தடை காரணமாக நேரடியாக வாங்க முடியவில்லை. இதனையடுத்து இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு வாங்கி வருகின்றன.
அதன் படி, 2022ல் 1.11 லட்சம் பேரல் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய், அந்நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டது. இது, கடந்த ஆண்டு 2023ல் 2.31 லட்சம் பேரல் ஆக உயர்ந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு
முன் எப்பொதும் இல்லாத அளவில், இந்தியாவில் இருந்து 115 சதவீதத்துக்கும் மேல் கச்சா எண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடைகளால் ரஷ்ய பொருட்களின் கச்சா எண்ணெய் பெரும் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.