sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'முதல் திருமணத்தில் விவாகரத்து பெறாவிட்டாலும் இரண்டாவது கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம்'

/

'முதல் திருமணத்தில் விவாகரத்து பெறாவிட்டாலும் இரண்டாவது கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம்'

'முதல் திருமணத்தில் விவாகரத்து பெறாவிட்டாலும் இரண்டாவது கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம்'

'முதல் திருமணத்தில் விவாகரத்து பெறாவிட்டாலும் இரண்டாவது கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம்'

14


ADDED : பிப் 06, 2025 12:45 AM

Google News

ADDED : பிப் 06, 2025 12:45 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'முதல் திருமணத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், இரண்டாவது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பெண்ணுக்கு உரிமை உள்ளது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தன் இரண்டாவது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவருக்கு, மாதம், 5,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கும்படி குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஹைதராபாத் உயர் நீதிமன்றம், 2017ல் ரத்து செய்தது.

இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:

இந்தப் பெண்ணுக்கு, ஹைதராபாதில், 1999ல் முதல் திருமணம் நடந்துள்ளது. அதற்கடுத்த ஆண்டில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து, 2005ல் நாடு திரும்பிய பின், கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதே, 2005ல் தன் வீட்டுக்கு அருகில் உள்ளவரை, அந்தப் பெண் திருமணம் செய்துள்ளார். ஆனால், இது தொடர்பாக, ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கடுத்த ஆண்டில், இருவரும் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு, 2008ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து, 2012ல் விவாகரத்து கோரியுள்ளனர்.

தன் மனைவிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம், இரண்டாவது கணவருக்கு தெரியும். அதனால், மோசடி செய்ததாக கூற முடியாது. அதுபோல, தன் முதல் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் எதையும் இந்தப் பெண் பெறவில்லை.

தன் முதல் கணவருடன் ஒப்பந்தம் செய்தாலும், சட்டப்பூர்வமாக அதை ரத்து செய்யவில்லை. முதல் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறாததால், இரண்டாவது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்கு அந்தப் பெண் ணுக்கு உரிமை உள்ளது.

ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த உத்தரவுகளில், ஜீவனாம்சம் என்பது அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும் நிவாரணம் அல்ல. கணவருக்கான சட்டப்பூர்வமான மற்றும் தார்மீக கடமையாகும். அந்த வகையில், இரண்டாவது கணவர், ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us