பிரதமர் குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கிறது; கிரண் ரிஜிஜூ
பிரதமர் குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கிறது; கிரண் ரிஜிஜூ
ADDED : அக் 30, 2025 01:44 PM

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது என பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பீஹாரில் தேர்தல் பிரசாரத்தில், சாத் பண்டிகை மற்றும் பிரதமர் மோடியை ராகுல் கடுமையாக சாடினார். அவர் 'ஓட்டுகளுக்காக பிரதமர் மோடி எதையும் செய்வார். பீஹாரில் நிதிஷ் குமார் அரசு பாஜ ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடக்கிறது என குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி குறித்து ராகுல் கூறிய கருத்துக்களுக்கு பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள சிறந்த தலைவர்கள் கூட ராகுலின் கருத்துகளால் வெட்கப்படுகிறார்கள். ராகுலில் கருத்துக்களால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது.
எந்தத் தலைவரும் அத்தகைய மொழியில் பேச முடியாது. ராகுல் தொடர்ந்து இப்படிப் பேசினால், இந்த நாட்டு மக்கள் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர மாட்டார்கள். ராகுல் ஒவ்வொரு முறை அவதூறு கருத்துக்களை பேசும் போதும், பின்னடைவை சந்திப்பதால், காங்கிரஸ் கட்சியினர் கவலைப்படுகிறார்கள்.
நாடு முன்னேறி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

