ADDED : மார் 06, 2024 04:50 AM
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., மேலிடம் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாகவும், வீடியோக்கள் உட்கொண்ட விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
பல்வேறு மொழிகளில், வட மாநிலங்களை குறிவைத்து பா.ஜ., செயல்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலின்போது, பிப்ரவரி முதல் மே வரை, விளம்பரத்துக்காக, 12.3 கோடி ரூபாயை பா.ஜ., செலவிட்டது. இம்முறை லோக்சபா தேர்தலுக்கும் விளம்பரங்கள் வெளியாகின்றன.
ஜனவரி 29 முதல் பிப்ரவரி 28 வரை மட்டும், 29.7 கோடி ரூபாயை பா.ஜ., செலவிட்டுள்ளது. 75 சதவீதம் விளம்பரங்கள் வீடியோ வடிவில் உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தல் முதல், இதுவரை கூகுளில் 52,000 விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதற்காக, 79.16 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 2019 முதல் 2023 பிப்ரவரி வரை முகநுால் விளம்பரங்கள் வெளியிட, 33 கோடி ரூபாய் செலவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

