எல்லாம் கடவுளின் ஆசி: ஸ்மித் மச்சாரின் தந்தை உருக்கம்
எல்லாம் கடவுளின் ஆசி: ஸ்மித் மச்சாரின் தந்தை உருக்கம்
ADDED : அக் 02, 2026 10:25 PM

புதுடில்லி: கடவுளின் ஆசியால், ஸ்மித் மச்சார் பிளை துபாய் விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையை சமாளித்தார் என்று அவரது தந்தை பூபேந்திர மச்சார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
மற்ற பெற்றோர்களை போல் எங்களுக்கு முதலில் பயமும் அச்சமும் ஏற்பட்டது. உடனடியாக, கடவுள் முன்பு விளக்கு ஏற்றி வழிபட்டோம். இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள யாருக்கும் பயிற்சி பெறவில்லை. ஆனால், கடவுளின் அருளால், மகனுக்குள் இருந்த சக்தி அவரை வழிநடத்தியது. பிரச்னை எழுந்த போது, தனது சக்தியை முழுமையாக பயன்படுத்தி பிரச்னையை சமாளித்தார். கடவுளின் அருளால் இது நடந்தது.
காயம் குணமடைய சிறிது காலம் ஆகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். தலை மற்றும் கைகயில் காயம் உள்ளது. தலையில் சிகிச்சை நடந்தது. தையல் போடப்பட்டன. இன்று என்னால் அனைத்துத் துல்லியமான விவரங்களையும் வழங்க முடியாது, ஆனால் காயம் தீவிரமானவை. குணமடையச் சிறிது காலம் ஆகும்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், 17 ஆண்டுகளாக அவர் விமானம் ஓட்டுகிறார். 17 ஆண்டுகளாக அவர் பல விமானிகளை வழிநடத்தி இருக்கிறார். விமானத்தில் பறப்பது தான் எல்லாம். தனது வேலையை தாண்டி,எதை பற்றியும் அவர் சிந்திப்பது இல்லை. இவ்வாறு பூபேந்திர மச்சார் கூறினார்.
பாராட்டத்தக்கது
ஸ்மித் மச்சார் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்த போது அவருடன் வேலைபார்த்த விமானி டீனா கோஸ்வாமி கூறியதாவது:
ஸ்மித் பணிவான மற்றும் மரியாதைக்குரிய மனிதர். அவர் அனைவரையும் மதிப்பார். அனைத்து சூழ்நிலைகளையும் கையாள பயிற்சி பெற்று இருக்கிறோம். எங்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பயிற்சி வகுப்பு நடக்கும். ஸ்மித் உடனடியாக செயல்பட்டார். அதற்கான பயிற்சி அளிக்கப்படும். ஆனால், அதை சரியான நேரத்தில் பயன்படுத்துவது கடினமாக உள்ளது.
நாங்கள் எந்த சூழ்நிலையை கையாண்டாலும் அதை ஒரு குழுவாக கையாள்வோம். ஒரவர் விமானத்தை ஓட்டுவார். மற்றொருவர் வழிநடத்துவது, தொடர்பு, சரிபார்ப்பு பட்டியலை சரிபார்ப்பது ஆகியவற்றை செய்வார். விமானி அறை என்பதுஇருவர் மட்டுமே இருக்கும்அறை. பிளை துபாய் விமானத்தில் ஆபத்து விமானி அறைக்கு உள்ளேயே இருந்து இருக்கிறது.
ஸ்மித் மச்சார் சமயோசித சிந்தனை, வீரம் என எது சொன்னாலும், கடவுளின் அருளால் அனைத்தையும் செய்தார் என்பது பாராட்டத்தக்கது. சரியான நேரத்தில் சரியான செயலுக்காக பயிற்சியை பயன்படுத்துவது மிகவும் பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
