sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மக்களைப் பாதுகாக்க அனைத்தையும் செய்ய வேண்டும்: சசி தரூர்

/

மக்களைப் பாதுகாக்க அனைத்தையும் செய்ய வேண்டும்: சசி தரூர்

மக்களைப் பாதுகாக்க அனைத்தையும் செய்ய வேண்டும்: சசி தரூர்

மக்களைப் பாதுகாக்க அனைத்தையும் செய்ய வேண்டும்: சசி தரூர்

1


ADDED : நவ 16, 2025 11:02 AM

Google News

1

ADDED : நவ 16, 2025 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: நமது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பீஹார் தேர்தல் தோல்வியை அடுத்து அரசியலில் இருந்து விலகுவதாக, லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அறிவித்தார். இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''நான் உண்மையில் அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நான் சொல்லும் காரணங்கள் மிகவும் எளிமையானவை. நான் பீஹாரில் பிரசாரகராக இருந்ததில்லை. அங்கு சென்றதில்லை, அடிப்படை யதார்த்தத்தை பார்த்தது கிடையாது

தேர்தலுக்குப் பிறகு, ஆய்வு செய்ய வேண்டும் என்பதுதான் நான் சொல்ல முடியும். என்ன நடந்தது, என்ன தவறு நடந்தது, பிரச்னைகள் என்ன என்பதை அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும், அது நடக்கும்போது, ​​சில முடிவுகள் வரக்கூடும். இவ்வாறு சசி தரூர் கூறினார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக...!

நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் வெடிபொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் 'எங்களின் தவறால் நடந்துவிட்டது' என்று ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்தார். இது குறித்து சசி தரூர் கூறியதாவது:

விசாரணையின் முடிவு குறித்து நாம் ஊகிப்பது சரியல்ல. துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாதம் என்பது 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடம் இருந்து வரும் ஒரு நிகழ்வு. சில வழிகளில், இது 1989-1990ல் காஷ்மீரில் தொடங்கியது. அங்கிருந்து, அது படிப்படியாக மோசமாகிவிட்டது, அது மும்பை, புனே, டில்லி வரை பரவியுள்ளது.

நமது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதி செய்ய வேண்டும். அதுதான் முதலில் மிக முக்கியமான விஷயம். இரண்டாவதாக, இவை நடக்கும்போது, ​​என்ன நடந்தது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்துங்கள். யார் இதைச் செய்தார்கள், அவற்றின் பின்னால் யார் இருக்கிறார்கள், ஏன் அது செய்யப்பட்டது?

இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது எப்படி, நாம் வலுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என் கருத்துப்படி, இவைதான் முக்கிய நோக்கங்கள். நம்மைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்தை உறுதியாகவும் திறமையாகவும் கையாள வேண்டும். ஆனால் நாட்டின் வளர்ச்சியின் பெரிய இலக்கை மறந்துவிடக் கூடாது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.

சீட் மறுப்பால் தற்கொலை

கேரளாவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால், திருக்கண்ணபுரம் வார்டில் வசிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஆனந்த் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து நிருபர்களிடம் சசி தரூர் கூறியதாவது: போலீசார் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பாஜவில் உள்ள எனது நண்பர்களிடம், அவர்கள் தங்கள் கட்சிக்குள் என்ன தவறு நடக்கிறது என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று நான் கூறலாம். இது மிகவும் கடுமையான சூழ்நிலை. ஒரு இளைஞனின் உடலை வைத்து அரசியல் செய்ய நான் விரும்பவில்லை, என்றார்.






      Dinamalar
      Follow us